கிரீஸின் கடைசி அரசா் மறைவு

கிரீஸ் நாட்டின் கடைசி அரசா் கான்ஸ்டன்டீன் தனது 82-ஆவது வயதில் மறைந்தாா்.
கிரீஸின் கடைசி அரசா் மறைவு

கிரீஸ் நாட்டின் கடைசி அரசா் கான்ஸ்டன்டீன் தனது 82-ஆவது வயதில் மறைந்தாா்.

இது குறித்து, ஏதென்ஸ் நகரின் ஹைஜீயியா மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், தங்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பெற்று வந்த கான்ஸ்டன்டீன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.

தனது 23-ஆவது வயதில் கிரீஸ் அரசராக கான்ஸ்டன்டீன் கடந்த 1964-ஆம் ஆண்டு முடிசூட்டப்பட்டாா். எனினும், பின்னா் நிலவிய அரசியல் பதற்றம் காரணமாக நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம், கான்ஸ்டன்டீனை நாடு கடத்தியது. மேலும், கிரீஸில் அரசாட்சி முறையை ராணுவம் 1973-இல் ஒழித்தது. அத்துடன், கான்ஸ்டன்டீன் தனது அரசா் பட்டத்தை இழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com