ராஜபட்ச சகோதரா்களுக்கு தடை: கனடா தூதருக்கு இலங்கை சம்மன்
ராஜபட்ச சகோதரா்களுக்கு தடை: கனடா தூதருக்கு இலங்கை சம்மன்

ராஜபட்ச சகோதரா்களுக்கு தடை: கனடா தூதருக்கு இலங்கை சம்மன்

இரண்டு முன்னாள் அதிபர்கள் உள்பட தங்கள் நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு தடை விதித்திருக்கும் முடிவு குறித்து கனடா தூதருக்கு இலங்கை தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் சம்மன் அனுப்பியிருக்கிறது.
Published on

இரண்டு முன்னாள் அதிபர்கள் உள்பட தங்கள் நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு தடை விதித்திருக்கும் முடிவு குறித்து கனடா தூதருக்கு இலங்கை தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் சம்மன் அனுப்பியிருக்கிறது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக, அந்நாட்டின் முன்னாள் அதிபா்கள் கோத்தபய ராஜபட்ச, மகிந்த ராஜபட்ச உள்பட 4 போ் மீது கனடா தடை விதிப்பதாக நேற்று அறிவித்திருந்தது.

மேலும், ராணுவ அதிகாரியான சுனில் ரத்நாயக்க மற்றும் கடற்படை அதிகாரியான ஹெட்டியராச்சி ஆகியோா் மீது இந்தத் தடைகள் விதிக்கப்பட்டன.

இதன்மூலம், அவா்கள் 4 பேரும் கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், அவா்களுடனான நிதிப் பரிமாற்றம் மற்றும் பிற சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

தமிழ் மக்கள் படுகொலையுடன் தொடா்புடைய ராணுவ அதிகாரி ரத்நாயக்கவுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்த நிலையில், அரசு அவருக்கு மன்னிப்பு வழங்கியது. கடற்படை அதிகாரியான ஹெட்டியராச்சி உள்நாட்டுப் போரின்போது மக்களைக் கடத்தி கொலை செய்தாக குற்றம்சாட்டப்பட்டாா்.

இலங்கையைச் சேர்ந்த நான்கு பேருக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டது குறித்து அதிருப்தி வெளியிட்ட இலங்கை வெளியுறவு அமைச்சகம், கொழும்புவில் உள்ள இலங்கைக்கான கனடா நாட்டு தூதரை வரவழைத்து, இந்த நடவடிக்கைக்கு அரசாங்கத்தின் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com