அதிக பலனுடையது எந்த நாட்டின் பாஸ்போர்ட் தெரியுமா?

உலகில் எந்த நாட்டின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அதிக பலனுடையது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதிக பலனுடையது எந்த நாட்டின் பாஸ்போர்ட் தெரியுமா?
Published on
Updated on
1 min read

உலகில் எந்த நாட்டின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அதிக பலனுடையது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள கடவுச்சீட்டு இன்றியமையாதது. ஒருசில நாடுகள் விதிவிலக்காக இருந்தாலும், பெரும்பாலான நாடுகளுக்கு கடவுச்சீட்டு அவசியமாகிறது.

கடவுச்சீட்டிலும் நான்கு விதம் உள்ளன. ஆர்டினரி பாஸ்போர்ட் (சாதாரண கடவுச்சீட்டு) சாதாரண குடிமக்களுக்கும், துறை சார்ந்த கடவுச்சீட்டு (Official) அரசாங்க ஊழியர்களுக்கும், முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கான (Diplomatic) கடவுச்சீட்டு, வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு ல்பவர்களுக்கான ஜம்போ கடவுச்சீட்டு (Jumbo) போன்றவை வழங்கப்படுகின்றன. 

இதில் எந்த நாட்டின் கடவுச்சீட்டு அதிக பலனுடையது என்பது குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. லண்டனைச் சேர்ந்த ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் என்ற நிறுவனம் இந்த தரவை வெளியிட்டுள்ளது. 

முதலிடத்தில் சிங்கப்பூர் கடவுச்சீட்டு உள்ளது. இதன்மூலம் விசா இல்லாமல் 192 இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளலாம். ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அளித்துள்ள தரவுகளின்படி உலகம் முழுவதும் 227 இடங்களில் கடவுச்சீட்டு கட்டாயம்.

ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் நாட்டின் கடவுச்சீட்டு 2ஆம் இடம்பெற்றுள்ளது. இந்த நாட்டின் கடவுச்சீட்டுகள் மூலம் விசா இல்லாமல் 190 இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளலாம்.

அதனைத் தொடர்ந்து ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜப்பான், லக்ஸம்பர்க், தென்கொரியா, ஸ்வீடன் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டு 3ஆம் இடம் பிடித்துள்ளன. இதன்மூலம் 189 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். 

4வது இடத்தில் டென்மார்க், ஐயர்லாந்து, நெதர்லாந்து, லண்டன் கடவுச்சீட்டு உள்ளது. இதன் மூலம் விசா இல்லாமல் 188 இடங்களுக்கு பயணிக்கலாம். 

5வது இடத்தில் பெல்ஜியம், செக்குடியரசு, மால்டா, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல், ஆஸ்திரேலியா, ஹங்கேரி, போலாந்து, கனடா ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டு உள்ளது. இதன் மூலம் 186 இடங்களுக்கு விசா இலாமல் பயணிக்கலாம். 

இந்தியாவின் கடவுச்சீட்டு 80வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் 57 இடங்களுக்கு விசா இன்றி பயணிக்கலாம். பாகிஸ்தான் கடவுச்சீட்டு 100வது இடத்தில் உள்ளது.

இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடம் (103) பிடித்துள்ளது. இந்த நாட்டின் கடவுச்சீட்டு மூலம் 27 இடங்களுக்கு மட்டுமே விசா இன்றி பயணிக்கலாம். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com