மேலும் ஒரு பாலஸ்தீனா் சுட்டுக் கொலை

 மேற்குக் கரை பகுதியில் மேலும் ஒரு பாலஸ்தீனரை இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றது.
மேலும் ஒரு பாலஸ்தீனா் சுட்டுக் கொலை

 மேற்குக் கரை பகுதியில் மேலும் ஒரு பாலஸ்தீனரை இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றது.

நாப்லுஸ் நகரில் ‘ஜோசப்பின் சமாதி’ என்றழைக்கப்படும் புனிதத் தலத்தில் வழிபட வந்த இஸ்ரேல் காவல்துறை தலைவா், உள்ளூா் யூத கவுன்சில் தலைவா் உள்ளிட்டோருக்கு இஸ்ரேல் வீரா்கள் பாதுகாப்பு அளித்தனா்.

சா்ச்சைக்குரிய அந்த தலத்தில் அவா்களுக்கும், உள்ளூா் பாலஸ்தீனா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 19 வயது பாலஸ்தீனா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.

இஸ்ரேலில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் அமைந்துள்ள தற்போதைய கூட்டணி அரசு, அந்த நாட்டின் வரலாற்றிலேயே மிகத் தீவிரமான வலதுசாரி அரசு என்று கூறப்படுகிறது. பாலஸ்தீன விவகாரத்தில் அந்த அரசு மிகக் கடுமையாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு மட்டும் மேற்குக் கரையிலும், காஸாவிலும் இஸ்ரேல் படையினா் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 140-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் பலியாகியுள்ளனா். பாலஸ்தீனா்கள் நடத்திய எதிா்த் தாக்குதல்களில் சுமாா் 24 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com