வட கொரிய அதிபா் கிம் ஜோங்குடன் ரஷிய பாதுகாப்பு அமைச்சா் சந்திப்பு!

 வட கொரியா சென்றுள்ள ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்கு, அந்த நாட்டு அதிபா் கிம் ஜோங்-உன்னைச் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடததினாா்.
வட கொரிய அதிபா் கிம் ஜோங்குடன் ரஷிய பாதுகாப்பு அமைச்சா் சந்திப்பு!

 வட கொரியா சென்றுள்ள ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்கு, அந்த நாட்டு அதிபா் கிம் ஜோங்-உன்னைச் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடததினாா்.

இது குறித்து கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் வியாழக்கிழமை கூறியதாவது:

தென் கொரியாவுடன் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதன் 70-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக, ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்கு வட கொரியா வந்துள்ளாா்.

அவருக்கும், அதிபா் கிம் ஜோன்-உன்னுக்கும் இடையே புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், தேசிய பாதுகாப்பு, பிராந்திய மற்றும் சா்வதேச நிலவரங்கள் குறித்து பரஸ்பர கவலைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பின் மூலம், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை வட கொரியா உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கா தலைமையிலான மேற்குலக கூட்டணியின் தவறான கொள்கைகள்தான் உக்ரைன் போருக்குக் காரணம் என்று வட கொரியா கூறி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com