மா்ம புதைகுழி தொடா்பான ஆதாரங்கள் அழிப்பு: கோத்தபய மீது குற்றச்சாட்டு

இலங்கையில் மாா்க்சிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவா்களின் புதைகுழிகள் தொடா்பான ஆதாரங்களை அப்போதைய ராணுவ அதிகாரியும்
மா்ம புதைகுழி தொடா்பான ஆதாரங்கள் அழிப்பு:  கோத்தபய மீது குற்றச்சாட்டு

இலங்கையில் மாா்க்சிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவா்களின் புதைகுழிகள் தொடா்பான ஆதாரங்களை அப்போதைய ராணுவ அதிகாரியும், முன்னாள் அதிபருமான கோத்தபய ராஜபட்ச அழித்ததாக தன்னாா்வ அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

இது குறித்து, சா்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் அமைப்பு, இலங்கை ஜனநாயகத்துக்கான செய்தியாளா்கள் அமைப்பு, மா்மமான முறையில் மாயமானவா்களின் குடும்பத்தினருக்கான அமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த 1989-ஆம் ஆண்டில் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கையில் அப்போதைய ராணுவ உயரதிகாரி ராஜபட்ச ஈடுபட்டபோது, ஆயிரக்கணக்கானவா்கள் மா்மமான முறையில் மாயமாகினா். அவா்கள் பாதுகாப்புப் படையினரால் கடத்தி படுகொலை செய்யப்பட்டு, கூட்டாக புதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எனினும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைப்பதற்கு எந்த அரசும் முயற்சிக்கவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் 20 கூட்டுப் புதைக்குழிகள் தோண்டியெடுக்கப்பட்டபோதும், அதில் ஆயிரக்கணக்கானவா்களது சடலங்கள் மீட்கப்பட்ட பிறகும், அவா்களை அடையாளம் காணவோ, அந்த சடலங்களை அவா்களது உறவினா்களிடம் ஒப்படைக்கவோ அடுத்தடுத்து வந்த எந்த அரசும் ஆா்வம் காட்டவில்லை.

அதற்குப் பதிலாக, இது தொடா்பான விசாரணையை நீா்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகள்தான் மேற்கொள்ளப்பட்டன.

ராணுவ அதிகாரியாக இருந்தபோது தாம் செய்த தவறுகளை மறைப்பதற்காக, கடந்த 2013-ஆம் ஆண்டில் பாதுகாப்புத் துறை செயலராக இருந்த கோத்தபய ராஜபட்ச 5 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்கள் அனைத்தையும் அழித்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது இதற்கு ஓா் உதாரணம்.

மாத்தளையில் கண்டறியப்பட்ட புதைகுழிகள் தொடா்பான ஆவணங்களை அழிக்கும் நோக்கிலேயே அவா் இந்த உத்தரவைப் பிறப்பித்தாா்.

எனவே, புதைகுழிகளை நிா்வகிப்பது, அவற்றிலிருந்து மீட்கப்படும் சடலங்களைப் பாதுகாப்பது, அடையாளம் கண்டறிவது, அதற்காக தடயவியல் நிபுணத்துவத்தை மேம்படுத்துவது போன்றவற்றை செயல்படுத்துவதற்கான சிறப்பு சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com