எகிப்து: கெய்ரோவில் ரயில் தடம் புரண்டதில் 2 பேர் பலி, 16 பேர் காயம்

எகிப்தின் வடக்கு கெய்ரோவில் செவ்வாய்க்கிழமை ரயில் தடம் புரண்டதில் 2 பேர் பலியாகினர், 16 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
எகிப்து: கெய்ரோவில் ரயில் தடம் புரண்டதில் 2 பேர் பலி, 16 பேர் காயம்


கெய்ரோ: எகிப்தின் வடக்கு கெய்ரோவில் செவ்வாய்க்கிழமை ரயில் தடம் புரண்டதில் 2 பேர் பலியாகினர், 16 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து எகிப்தின் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எகிப்தின் கெய்ரோவின் கலியுப்பில் உள்ள ரயில் நிலைய நடைமேடையில் பயணிகள் ரயில் செவ்வாய்க்கிழமை மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினரர். 16 பேர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக சுமார் 20 ஆம்புலன்ஸ்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. 

ரயில் தடம் புரண்டதற்கான காரணத்தைக் கண்டறியவும், இதற்கு "பொறுப்பவர்களைக் கண்டறிய"  ஒரு குழுவை அமைக்குமாறு எகிப்திய போக்குவரத்து அமைச்சர் கமெல் எல்-வசீர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக 2021 ஆம் ஆண்டில், எகிப்தில் இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 32 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 84 பேர் காயமடைந்தனர் என்று அரசாங்க அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

அஸ்வானில் இருந்து கெய்ரோ நோக்கிச் சென்ற ரயில், லக்சரில் இருந்து அலெக்ஸாண்ட்ரியா நோக்கிச் சென்ற ரயிலின் பின்புறத்தில் மோதியதாகவும், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவசரகால பிரேக்கை இழுத்ததால் இந்த மோதல் நிகழ்ந்ததாக எகிப்து ரயில்வே நிர்வாகம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com