ஹோலி பண்டிகைக்கு வித்தியாசமாக வாழ்த்து சொன்ன ஐரோப்பிய விண்வெளி மையம்

ஹோலி பண்டிகைக்கு ஐரோப்பிய விண்வெளி மையம் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளது. 
PC: europeanspaceagency
PC: europeanspaceagency

ஹோலி பண்டிகைக்கு ஐரோப்பிய விண்வெளி மையம் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளது. 

வட இந்தியாவின் மிக முக்கியப் பண்டிகையான ஹோலி இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடு முழுவதும் உள்ள வட மாநிலத்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் வண்ணம் பூசி ஹோலியை கொண்டாடி வருகின்றனர்.

ஹோலி பண்டிகைக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் ஐரோப்பிய விண்வெளி மையம் வித்தியாசமான முறையில் வாழ்த்து செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளது. 

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் பூமியிலிருந்து 1000 ஒளி ஆண்டுகள் மற்றும் 4500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நெபுலா நட்சத்திரக் கூட்டங்களின் வண்ணமயமான படங்களை இணைத்து வாழ்த்து செய்தி பகிரப்பட்டுள்ளது. 

ஐரோப்பிய விண்வெளி மையத்தின் இந்த வாழ்த்து செய்திக்கு பலரும் தங்களது நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com