
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 8 புல்-அப்ஸ்களை செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
தனது தொண்டு நிறுவனத்துக்காக நிதி திரட்டுவதற்காக அவர் மேற்கொண்ட இந்த முயற்சி முந்தைய சாதனைகளை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் ஜாக்சன் இட்டாலியானோ. உடற்பயிற்சி ஆர்வலரான இவர் தொண்டு நிறுவனத்துக்காக நிதி திரட்டுவதற்காக புதிய முயற்சியை மேற்கொள்ளத் திட்டமிட்டார்.
அதாவது 24 மணிநேரத்தில் 8,008 புல்-அப்ஸ் எடுத்து நிதி திரட்ட முடிவு செய்தார். அதன்படி 24 மணி நேரத்தில் திட்டமிட்டபடி புல்-அப்ஸ்களை எடுத்து முடித்தார். இதன்மூலம் அமெரிக்க ரூபாய் மதிப்பில் 6 ஆயிரம் (இந்திய ரூபாய் மதிப்பில் 4,80,000) நிதி திரண்டது.
மேலும், இதற்கு முந்தையை உலக சாதனையையும் அவர் முறியடித்தார். 24 மணி நேரத்தில் 7,715 புல்-அப்ஸ் எடுத்ததே இதற்கு முந்தைய உலக சாதனையாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.