ஆப்கன் மாகாண ஆளுநர் சுட்டுக் கொலை!

ஆப்கானிஸ்தானின் வடக்கு பால்க் மாகாணத்தின் ஆளுநர் ஹஜ்ஜி முல்லா முகமது தாவூர் மஸாமில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
ஆப்கன் மாகாண ஆளுநர் சுட்டுக் கொலை!

ஆப்கானிஸ்தானின் வடக்கு பால்க் மாகாணத்தின் ஆளுநர் ஹஜ்ஜி முல்லா முகமது தாவூர் மஸாமில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மாசர்-இ-ஷெரிப் நகரில் உள்ள அவரது அலுவலகத்தைக் குறிவைத்து வியாழக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதாக காபூலில் உள்ள தலிபான்களால் நடத்தப்படும் அரசு செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். 

அவர் மேலும் கூறுகையில், 

இஸ்லாத்தின் எதிரிகளால் திட்டமிடப்பட்டிருந்த குண்டுவெடிப்பில் ஆப்கன் மாகாண ஆளுநர் ஹஜ்ஜி முல்லா கொல்லப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று சுட்டுரை பதிவில் தெரிவித்தார். 

இன்று காலை 9.27 மணியளவில் மசாமிலின் அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் தற்கொலைபடையினர் ஒருவர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார். 

இந்த தாக்குதல் சம்பவத்தில் பொதுமக்கள் உள்பட இரண்டு பேர் காயமடைந்தனர். 

2021ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, முதல்முறையாக உயரதிகாரி ஒருவர் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு குழுவோ அல்லது தனிநபரோ பொறுப்பேற்கவில்லை என்று அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com