இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

இந்தோனேசியாவின் ரியாவ் தீவுகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 33 பேர் மாயமாகியுள்ளனர். 
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

இந்தோனேசியாவின் ரியாவ் தீவுகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 33 பேர் மாயமாகியுள்ளனர். 

இதுகுறித்து பேரிடர் முகமை அதிகாரி கூறுகையில், 

மார்ச் 6-ம் தேதி இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இயற்கைப் பேரிடரில் சிக்கியவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது. சம்பவ இடத்தில் மீட்புக் குழுவினர் கனரக வாகனங்கள் உதவியோடு தேடி வருகின்றனர். 

மொத்தம் இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அவர்களில் 21 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தேடுதல் பணி நடைபெற்று வருவதையடுத்து, பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

கடந்த திங்களன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 1300 பேர் தங்கள் வீடுகளை இழந்து வெளியேறியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது என்று அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com