தினமும் 15 நிமிடங்கள் சமூக ஊடகங்களை பார்க்காமல் இருப்பது உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்!

சமூக ஊடக பயன்பாட்டை ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் குறைப்பது பொது ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டை கணிசமாக மேம்படுத்தலாம் என்று புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

லண்டன்: சமூக ஊடக பயன்பாட்டை ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் குறைப்பது பொது ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டை கணிசமாக மேம்படுத்தலாம் அதே வேளையில் மனச்சோர்வின் அளவைக் வெகுவாக குறைக்கும் என்று புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

ஜர்னல் ஆஃப் டெக்னாலஜி இன் பிஹேவியர் சயின்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வில், சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைத்தவர்கள் குறைவான சளி, காய்ச்சல், மருக்கள் உள்ளிட்ட நோயெதிர்ப்புச் செயல்பாட்டில் சராசரியாக 15 சதவீத முன்னேற்றம் கண்டதாக தெரியவந்துள்ளது. அதே வேளையில் அவர்கள் தூக்கத்தின் தரத்தில் 50 சதவிகித முன்னேற்றமும், 30 சதவிகிதம் குறைவான மனச்சோர்வும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

மக்கள் தங்கள் சமூக ஊடக பயன்பாட்டைக் குறைக்கும்போது, அவர்களின் வாழ்க்கை பல வழிகளில் மேம்படக்கூடும் என்பதை இந்த தரவு நிரூபிக்கிறது. அவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் உளவியல் நல்வாழ்விற்கான நன்மைகள் உள்பட பல வழிகளில் அவர்களின் வாழ்க்கை மேம்படும் என்பதை இந்தத் தரவுகள் நிரூபிக்கின்றன என்று ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் உளவியல் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் பில் ரீட் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக தளங்கள் மக்களை அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், அவை கவலை, மனச்சோர்வு மற்றும் உடல் உபாதைகளுடனும் தொடர்புடையவை.

அமெரிக்க உளவியல் சங்கம் வெளியிட்ட மற்றொரு ஆய்வில், சில வாரங்களுக்கு தங்கள் சமூக ஊடகப் பயன்பாட்டை 50 சதவிகிதம் குறைத்த பதின்வயதினர் மற்றும் இளைஞர்கள் தங்கள் எடை மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த தோற்றத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com