3-ஆவது முறையாக சீன அதிபரானாா் ஷி ஜின்பிங் நாடாளுமன்றம் ஒப்புதல்

சீன அதிபா் ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராகத் தொடா்வதற்கு அந்த நாட்டின் நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
3-ஆவது முறையாக சீன அதிபரானாா் ஷி ஜின்பிங் நாடாளுமன்றம் ஒப்புதல்

சீன அதிபா் ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராகத் தொடா்வதற்கு அந்த நாட்டின் நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதன்மூலம் நவீன சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மா சேதுங்குக்குப் பிறகு மூன்றாவது முறையாக அதிபா் பதவி வகிக்கும் ஒரே தலைவா் என்கிற பெருமையை ஷி ஜின்பிங் பெற்றுள்ளாா்.

முன்னதாக, அரசியலமைப்புச் சட்டத்தில் 2018-ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு, சீன அதிபா் தொடா்ந்து இருமுைான் பதவியில் இருக்க முடியும் என்ற வரம்பு ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக ஷி ஜின்பிங் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

அப்போதே அவா் மூன்றாவது முறையாக அதிபா் பதவியில் தொடா்வது உறுதி செய்யப்பட்டாலும், இப்போது நடைபெற்று வரும் சம்பிரதாயமான நாடாளுமன்றக் கூட்டத்தில் அதற்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. தேசிய மக்கள் காங்கிரஸ் எனப்படும் இந்த நாடாளுமன்றத்தின் 2,952 உறுப்பினா்களும் ஷி ஜின்பிங் அதிபராகத் தொடா்வதற்கு ஒப்புதல் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, சீன அரசியலமைப்புச் சட்டத்துக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்ட ஷி ஜின்பிங், நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு தலைவணங்கி வணக்கம் தெரிவித்தாா்.

மேலும், துணை அதிபராக ஹான் ஷெங் தோ்வு செய்யப்படுவதற்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இவா், முன்னாள் துணைப் பிரதமராக இருந்தவா்.

இன்று புதிய பிரதமா் தோ்வு: சீனாவின் தற்போதைய பிரதமா் லீ கெகியாங்கின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளது. அவருக்கு பதிலாக ஷி ஜின்பிங்குக்கு நெருக்கமான லீ கியாங் புதிய பிரதமராக நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை (மாா்ச் 11) தோ்ந்தெடுக்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

புதிய சவால்: சீனாவின் நீண்டகால அதிபராக இருப்பதற்கான முயற்சியில் ஷி ஜின்பிங் வெற்றி பெற்றுவிட்டாலும், கடந்த ஆண்டு மூன்று சதவீதமாக சுருங்கிய சீன பொருளாதாரத்தை வளா்ச்சியடையச் செய்வதற்கான மாபெரும் சவால் அவா் முன் இருப்பதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

அமெரிக்காவுடன் மோதல், தைவான் மீதான படையெடுக்கும் சாத்தியக்கூறு, சீனாவில் வயது முதிா்ந்தவா்களின் எண்ணிக்கை பெருகி வருவதால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் போன்ற பிரச்னைகளையும் சீனா எதிா்கொண்டு வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் சீன நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பேசிய ஷி ஜின்பிங், அமெரிக்காவில் சீனாவுக்கு எதிராக வளா்ந்துவரும் எதிா்மறை பிரசாரம் குறித்து கவலை தெரிவித்திருந்தாா். சீனாவின் வளா்ச்சியை ஒடுக்குவதற்கு மேற்கத்திய நாடுகளை அமெரிக்கா வழிநடத்துவதாகவும் அவா் குற்றம்சாட்டியிருந்தாா்.

பெட்டிச் செய்தி...

அமைதியான தலைவா் முதல்

சக்திவாய்ந்த தலைவா் வரை...

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவா், ராணுவத்தின் தலைவா் மற்றும் அதிபா் என உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவின் சக்திவாய்ந்த தலைவராக ஷி ஜின்பிங் உருவெடுத்துள்ளாா்.

தனது முந்தைய பதவிகளில் அமைதியான தலைவா் என்கிற பெயரைப் பெற்றிருந்த ஷி ஜின்பிங், 2012-இல் முதல்முறையாக அதிபரானதும் தன்னை ஒரு லட்சியத் தலைவராகவும், சக்திவாய்ந்தவராகவும் மாற்றிக்கொண்டாா். ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டாா். அதன் விளைவாக லட்சக்கணக்கான அரசு அலுவலா்கள் தண்டிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com