பிரிட்டன் மன்னராக முடிசூட்டிக்கொள்ளும் மூன்றாம் சார்லஸ்

பிரிட்டனில், இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடா்ந்து மூத்த மகன் சாா்லஸ் கடந்த நவம்பரில் அரியணையேறினாா். அவரது முடிசூட்டு விழா சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
பிரிட்டன் மன்னராக முடிசூட்டிக்கொள்ளும் மூன்றாம் சார்லஸ்
Updated on
2 min read

பிரிட்டனில், இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடா்ந்து மூத்த மகன் சாா்லஸ் கடந்த நவம்பரில் அரியணையேறினாா். அவரது முடிசூட்டு விழா சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது முடிசூட்டு நிகழ்ச்சியில் அணிந்த அதே எட்வர்ட் மகுடத்தை தலையில் அணிந்து முடிசூடிக்கொள்கிறார் அரசர் இரண்டாம் சார்லஸ். பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூடும் நிகழ்ச்சியை முன்னிட்டு, லண்டன் நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டா் தேவாலயத்துக்கு தங்க ரதத்தில் வந்திறங்கினார் மூன்றாம் சார்லஸ். அவருடன் ராணி கமீலாவும் வருகை தந்தார். அவர்களுக்கு இசை வாத்தியங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முடிசூடுவதற்கான உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டு, உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டார். முதல் முறையாக, வெல்ஸ் மொழியில் பாடல்கள் இசைக்கப்பட்டன.

முடிசூட்டு விழாவின்போது, மறைந்த இரண்டாம் எலிசபெத் முடிசூட்டிக் கொண்ட புனித எட்வர்ட் கிரீடத்தை, அரசர் மூன்றாம் சார்லஸ் சூட்டிக்கொள்கிறார்.  கையில் செங்கோல் ஏந்தி அரியணையில் அமரும் அவருக்கு புனித எட்வர்ட் கிரீடம் அணிவிக்கப்பட்டு முடிசூட்டப்படுகிறது. மற்றொரு கையில் தடி ஏந்தி அவர் ஆட்சிப்பொறுப்பை முறைப்படி ஏற்றுக்கொள்கிறார்.

கடந்த 1953ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி மறைந்த இரண்டாம் எலிசபெத் பதவியேற்றுக் கொண்டார். சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் மன்னர் முடிசூடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுகிறது. உலக நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்துகொண்டுள்ளார்.

இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 100 முக்கியத் தலைவா்கள், 203 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் அரச குடும்ப உறுப்பினா்கள் பங்கேற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com