மகாராணி எலிசபெத் அணிந்த எட்வர்ட் கிரீடத்தை முடிசூடிக் கொள்ளும் அரசர் மூன்றாம் சார்லஸ்

பிரிட்டனில், இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடா்ந்து மூத்த மகன் சாா்லஸ் கடந்த நவம்பரில் அரியணையேறினாா். அவரது முடிசூட்டு விழா சனிக்கிழமை கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.
எட்வர்ட் கிரீடம்
எட்வர்ட் கிரீடம்

பிரிட்டன் ராணியாக முடிசூட்டிக்கொண்டு 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சிபுரிந்த இரண்டாம் எலிசபெத் தனது முடிசூட்டு நிகழ்ச்சியில் அணிந்த அதே எட்வர்ட் மகுடத்தை தனது தலையில் அணிந்து முடிசூடிக்கொள்கிறார் அரசர் இரண்டாம் சார்லஸ்.

பிரிட்டனில், இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடா்ந்து மூத்த மகன் சாா்லஸ் கடந்த நவம்பரில் அரியணையேறினாா். அவரது முடிசூட்டு விழா சனிக்கிழமை கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டா் தேவாலயத்தில் சனிக்கிழமை காலை நடைபெறும் முடிசூட்டு விழாவின்போது, மறைந்த இரண்டாம் எலிசபெத் முடிசூட்டிக் கொண்ட புனித எட்வர்ட் கிரீடத்தையே அரசர் மூன்றாம் சார்லஸ் சூட்டிக்கொள்ளவிருக்கிறார். கையில் செங்கோல் ஏந்தி அரியணையில் அமரும் அவருக்கு புனித எட்வர்ட் கிரீடம் அணிவிக்கப்பட்டு முடிசூட்டப்படவிருக்கிறது. மற்றொரு கையில் தடி ஏந்தி அவர் ஆட்சிப்பொறுப்பை முறைப்படி ஏற்கவிருக்கிறார்.

கடந்த ​1953ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி லண்டனில், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவின் போது, செயின்ட் எட்வர்டின் கிரீடத்தை அணிவித்து, கேன்டர்பரி பேராயர் அவருக்கு ஆசீர்வாதத்தைப் படித்து முடிசூட்டிவைத்தார்.

தற்போது, மறைந்த மகாராணி எலிசபெத்தின் மூத்த மகன், மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாநடைபெறும்  தருணம். இந்த முடிசூட்டு விழாவின் முக்கிய நிகழ்வாக, கேன்டர்பரி பேராயர், சார்லஸ் மன்னரின் தலையில் புனித எட்வர்டின் கிரீடத்தை வைத்து முடிசூட்டுவார்.

பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸ் தனது ஆட்சிக்காலத்தில், வேலைப்பாடு கொண்ட இந்த தங்க கிரீடத்தை இந்த முடிசூட்டு நாளில் மட்டுமே அணிந்திருப்பார். இது ஊதா நிற வெல்வெட் தொப்பி போன்று, எர்மைன் பட்டை மற்றும் குறுக்குவெட்டு வளைவுகளுடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டது.

இந்தக் கிரீடத்துக்கு 1042 - 1066 வரை, அதாவது தான் இறக்கும் வரை பிரிட்டனை ஆட்சிபுரிந்த அரசர் செயின்ட் எட்வர்டின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 100 முக்கியத் தலைவா்கள், 203 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் அரச குடும்ப உறுப்பினா்கள் பங்கேற்க உள்ளனா்.

எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டன் அரசியாக இருந்த இரண்டாம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பரில் மறைந்தாா். இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடா்ந்து மூத்த மகன் சாா்லஸ் கடந்த நவம்பரில் அரியணையேறினாா். அவரது முடிசூட்டு விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.

பிரிட்டன் அரசராக மூன்றாம் சாா்லஸ் முடிசூடும் விழாவில் இந்திய அரசின் சாா்பில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் லண்டனுக்கு வெள்ளிக்கிழமை சென்றடைந்தாா்.

சிறப்பு விமானத்தில் லண்டன் சென்றடைந்த ஜகதீப் தன்கருக்கு இந்திய முப்படையினரின் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் அவா் லண்டனில் மாா்ல்பரோ மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றபோது மூன்றாம் சாா்லஸை அவா் சந்தித்து உரையாடினாா் என்று குடியரசு துணைத் தலைவா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டா் தேவாலயத்தில் சனிக்கிழமை காலை நடைபெறவுள்ள முடிசூட்டு விழாவில் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்கவுள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com