ஆப்கானிஸ்தான் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் பலி

ஆப்கானிஸ்தான் வடக்கு சமாங்கன் மாகாணத்தின் தலிபான்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானிகள் இரண்டு பேர் பலியாகினர்
கோப்புப்படம்
கோப்புப்படம்

காபூல் (ஆப்கானிஸ்தான்):  ஆப்கானிஸ்தான் வடக்கு சமாங்கன் மாகாணத்தின் தலிபான்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானிகள் இரண்டு பேர் பலியாகினர் என்று அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானிஸ் ராணுவத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தாலிபன்கள் அதற்கு தேவையான உபகரணங்கள், ஆயுதங்களை அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகளிடம் இருந்து பெற்று வருகின்றன. 

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் வடக்கு சமாங்கன் மாகாணத்தின் தலிபான்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படையின் எம்டி- 530 ரக ஹெலிகாப்டர், குல்ம் மாவட்டத்தில் உயர் மின்னழுத்த மின் கம்பியில் மோதியதால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு விமானிகள் பலியாகினர் என பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தி உள்ளது.

முன்னதாக, சமாங்கன் மாகாணத்தில் உள்ள தலிபான்களின் தகவல் மற்றும் கலாசாரத் துறைத் தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாகாணத்தின் குல்ம் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் கிடைத்தது. 

ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொண்டு, இறுதியில் விபத்துக்குள்ளாவது, அதன் விமானிகள் பலியாவது இது முதல் முறை அல்ல என்றும் தொழில்நுட்ப காரணங்களால் இதுபோன்ற விபத்துகள் நிகழ்கின்றன. இதுபோன்ற விபத்துகளில் அதிகயளவில் விமானிகள் பலியாவதாக அவர் தெரிவித்தார். 

2021 ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, பல விமானப்படை ஹெலிகாப்டர்கள் அறியப்படாத காரணங்களால் விபத்துக்குள்ளாகியுள்ளன.

2022 செப்டம்பர் மாதம், காபூலில் ராணுவப் பயிற்சியின் போது அமெரிக்க தயாரிப்பான பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது, இதில் குறைந்தது மூன்று ஆப்கானிஸ்தான் பணியாளர்கள் பலியானதாக தலிபான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலிபான் அரசின் வசம் எத்தனை அமெரிக்க ஹெலிகாப்டர்கள் உள்ளன என்பது தெரியவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் பிற்பகுதியில் ஆப்கன் அரசுக்கு அமெரிக்கா அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. இதன் காரணமாக, அப்போது பணியில் இருந்த நூற்றுக்கணக்கான ஆப்கன் விமானிகள், மத்திய ஆசிய நாடுகளான தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com