சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற 1 லட்சம் இந்தியர்கள் கைது!

உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் செல்ல முயன்று பிடிக்கப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் எல்லை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 
சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற 1 லட்சம் இந்தியர்கள் கைது!

அமெரிக்க அரசால் கடந்த அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை மட்டும் 96,917 இந்தியர்கள் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக அந்நாட்டிற்குள் செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 முதல் 2021-ல் 30,662  இந்தியர்கள், இந்தக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டனர். 2021 முதல் 2022ல் இது இரண்டு மடங்காக உயர்ந்து 63,927 பேர் கைது செய்யப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2022 - 2023-ல் கைது செய்யப்பட்ட 96,917 பேரில்  30,010 பேர் கனடா எல்லை வழியாகவும் 41,770 பேர் மெக்சிகோ வழியாகவும் நுழைய முயன்றதாகக் கூறப்பட்டுள்ளது.

எல்லைகளில் கைதான இந்தியர்கள் குடும்பமாகவும், தனியாகவும் வந்திருக்கின்றனர். இதில், குழந்தைகளும் அடக்கம் என்றாலும்  அதிகம் கைது செய்யப்பட்டது தனியாக வந்த இளைஞர்கள்தான். அமெரிக்காவின் கடந்த 2022 நிதியாண்டில் (அக்டோபர் - செப்டம்பர்) மட்டும் மொத்தம் 84,000 இந்திய இளைஞர்கள் அமெரிக்காவற்குள் சட்டவிரோதமாக நுழைய முன்றுள்ளனர். துணையின்றி வந்த 730 சிறார்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களை விசாரித்ததில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையே காரணமாகத் தெரிவித்துள்ளதாகவும்  அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சட்டவிரோதமாக, அமெரிக்காவில் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு ஆண்டு அதிகரிப்பதால் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com