மனிதரின் வயதைக் குறைக்க முடியுமா? எலிகள் மீதான சோதனை வெற்றி!

எலி மீது நடத்தப்பட்ட வயதைக் குறைக்கும் சோதனை 70 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மனிதரின் வயதைக் குறைக்க முடியுமா? எலிகள் மீதான சோதனை வெற்றி!

எலி மீது நடத்தப்பட்ட வயதைக் குறைக்கும் சோதனை 70 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வயதை குறைக்கும் பல ஆராய்ச்சிகள் தற்போதைய நவீன உலகில் ஏதேனும் ஒரு பகுதியில் அன்றாடும் நடைபெற்று வருகின்றன. முந்தைய காலங்களில்கூட 53 வயது பெண்ணின் திசுவை 23 வயதாக குறைக்கும் ஆராய்ச்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

தற்போது, மனிதரின் மரபணுவில் மாற்றம் கொண்டு வந்து உயிரியல் ரீதியாக உடல் உறுப்புகளின் வயதைக் குறைக்கும் ஆராய்ச்சியை கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக வயதான எலியின் மீது நடத்தப்பட்ட சோதனை கிட்டத்திட்ட 70 சதவிகிதம் வெற்றி அடைந்துள்ளதாக ‘ஜிரோசயின்ஸ்’(புவி அறிவியல்) என்ற இதழில் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பது:

“பன்றிகளின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் மற்றும் நானோ துகள்களை எடுத்து வயதான எலிகளுக்கு செலுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ‘இ5’ எனப்படும் வயதைக் குறைக்கும் வயது எதிர்ப்பு சிகிச்சையானது கிட்டத்திட்ட 70 சதவிகிதம் வெற்றி அடைந்துள்ளது.

எலியின் மரபணுவில் நம்ப முடியாத அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதயம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளின் வயது பாதியாக குறைந்துள்ளது.

இந்த சோதனை மனிதர்கள் மீது நடத்தப்பட்டால் 80 வயது முதியவரை 26 வயது இளைஞராக மாற்ற முடியும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், எலிகளின் மேல் நடத்தப்பட்ட சோதனையை மனிதர்கள் மீது நடத்தும்போது சிறிய வேறுபாடுகள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com