காஸாவில் மருத்துவமனை மீது தொடரும் இஸ்ரேல் தாக்குதல்!

காஸாவின் பிரதான மருத்துவமனையைச் சுற்றி வெளியே கடும் சண்டை நடந்துகொண்டிருக்கிறது.
குண்டுவீச்சுக்கு நடுவே அல் ஷிபா மருத்துவமனை...
குண்டுவீச்சுக்கு நடுவே அல் ஷிபா மருத்துவமனை...
Published on
Updated on
1 min read

கான் யூனிஸ்: காஸாவின் பிரதான மருத்துவமனையைச் சுற்றி வெளியே கடும் சண்டை நடந்துகொண்டிருக்கிறது.

குழந்தைகளையும் மற்றவர்களையும் வெளியேற்ற உதவியதாக உதவியதாக தெரிவித்த இஸ்ரேல் கூறியதை மறுத்த மருத்துவமனை அலுவலர்களும் மக்களும் தொடர்ந்து கடும் தாக்குதல் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் மின்சாரம் இல்லை. அத்தியாவசியப் பொருள்களும் இல்லை. பிஞ்சுக்குழந்தைகளைக் காப்பதற்கான இன்குபேட்டர் சாதனங்கள் பயன்படுத்த முடியாமல் கிடக்கின்றன.

உடனடியாகத் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற அழைப்புகளை நிராகரித்துவிட்ட இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் குழுவினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்ற 240 பேரும் விடுவிக்கப்படாதவரை தாக்குதல் தொடரும் என்றிருக்கிறார்.

ஷிபா மருத்துவமனையைச் சுற்றி குண்டுகள் வீசப்படுவதாகவும் வான்வழித் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எந்தவித ஆதாரங்களும் இல்லாமலேயே மருத்துவமனைக்குள் ஒரு கட்டளை முகாமை ஹமாஸ் வைத்திருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஹமாஸ் அமைப்பும் மருத்துவமனை ஊழியர்களும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

அவர்கள் வெளியே இருக்கிறார்கள். வாசலிலிருந்து மிக அருகிலேயே இருக்கிறார்கள் என்கிறார் அருகே வசிக்கும் ஒருவர்.

மருத்துவமனையிலிருக்கும் கடைசி மின்சார ஜெனரேட்டரும் எரிபொருள் இல்லாமல் சனிக்கிழமை நின்றுவிட்டது. இதனால், மூன்று குறைப்பிரசவக் குழந்தைகளும் 4 நோயாளிகளும் இறந்துவிட்டனர் என்று நலவாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 36 குழந்தைகள் இறந்துவிடக் கூடிய ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com