
டெஹ்ரான் : மேற்கு ஆசிய நாடான ஈரானில் உள்ள ஓஷ்ட்ரான்கோ மலைத் தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 5 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்தனர்.
ஈரான் தலைகர் டெஹ்ரானின் தென்மேற்கே, சுமார் 300 கி.மீ தூரத்திலுள்ள ஓஷ்ட்ரான்கோ மலைத் தொடரின் தொடரில் கடல் மட்டத்திலிருந்து 4,150 மீட்டர்(13,600 அடி) உயரத்தில் சான் போரான் மலைச்சிகரம் அமைந்துள்ளது. அங்கு கடந்த சில வாரங்களாக பலத்த மழையும் கடும் பனிப்பொழிவும் இருந்து வருகிறது. இதன் காரணமாக, அவ்வப்போது அபாயகரமான பனிச்சரிவும் ஏற்படுகிறது.
இந்தநிலையில், கடந்த வியாழனன்று (நவ. 23), 9 பேர் அடங்கிய மலையேற்ற வீரர்கள் குழு ஒன்று, உள்ளூர் அதிகாரிகளின் எச்சரிக்கையும் மீறி சான் போரான் மலைச்சிகரத்தில் மலையேறத் தொடங்கினர். இந்தநிலையில், அங்கு நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கி 5 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்ததாகவும், 4 வீரர்கள் காயமடைந்ததாகவும், அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இறந்த 5 வீரர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும்,
காயமடைந்த 4 வீரர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2020 ஆம் வருடம் தெஹ்ரானின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மலைப் பகுதிகளில் நிகழ்ந்த தொடர் பனிச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.