10,000 ஆண்டுகளுக்கு ஓடும் மணிக்கூண்டை உருவாக்கும் அமேசான் நிறுவனர்!

அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் 10,000 ஆண்டுகள் ஓடும் மணிக்கூண்டைக் கட்டிவருகிறார். 
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்
Published on
Updated on
1 min read

பத்தாயிரம் ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரத்தை உருவாக்கும் பணியில் தற்போது தீவிரம் காட்டிவருகிறார் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பசோஸ். 500 அடி உயரம் கொண்ட இந்தக் கடிகாரம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான மலை ஒன்றுக்குள் கட்டப்பட்டுவருகிறது. இதற்கு 350 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிகாரத்திற்கானத் திட்டம் டேனி ஹில்லிஸ் எனும் அறிவியலாளருடையது. இந்தக் கடிகாரத்திற்கு க்ளாக் ஆப் தி லாங் (Clock of the Long) எனப் பெயரிட்டுள்ளனர். மேலும் இந்தக் கடிகாரத்தின் நொடிமுள் ஒரு ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு வருடம் என்பது ஒரு நொடியாக அளவிடப்படுவதாக ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

இந்த மணியளவின் படி இந்தக் கடிகாரம் 10,000 ஆண்டுகளுக்கு இயங்கப்போவதாகக் கூறியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் கடிகாரம் ஒலி எழுப்பும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது நீண்டகால சிந்தனைக்கான நினைவுச்சின்னமாக உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் கட்டுமானப்பணிகள் முடிவடைந்து மக்கள் பார்வையிட வரும்போது, தங்கள் பெயரும் இந்த கடிகாரத்தைப் போலக் காலம் கடந்து நிற்க வேண்டும் என்ற ஊக்கத்தைப் பெற வேண்டும் எனவும் விரும்புவதாக கடிகாரக் கட்டுமானத் திட்டக்குழு தெரிவித்துள்ளது. 

முதலில் இன்னும் 10,000 ஆண்டுகள் மனிதர்களால் பூமியில் வாழ முடியுமா என எழும் கேள்விகளுக்கு அந்த நம்பிக்கையை விதைக்கும் நோக்கமே இந்தக் கடிகாரம் என அந்நிறுவனம் தனது வலைதளப் பக்கத்தில் பதிலளித்துள்ளது. 

இந்தக் கடிகாரத்தின் முதல் ஒலி இன்னும் 1000 ஆண்டுகளுக்குப் பின்னரே கேட்கும் என்ற நிலையில் அதனைக் கேட்கப்போகும் உயிர்களை உருவாக்கும் உயிர்கள் கூட இன்னும் உருவாகவில்லை என்பது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com