வறுமையால் மார்வல் படங்களை இயக்கினேன் : பிரபல ஹாலிவுட் இயக்குநர்!

மார்வல் திரைப்படங்களை வறுமையின் காரணமாகவே எடுக்க ஒத்துக்கொண்டதாகவும் 'தோர் காமிக்ஸ்' தனக்குப் பிடிக்காது எனவும் பிரபல ஹாலிவுட் இயக்குநர் தெரிவித்துள்ளார். 
வறுமையால் மார்வல் படங்களை இயக்கினேன் : பிரபல ஹாலிவுட் இயக்குநர்!
Published on
Updated on
1 min read


பிரபல ஹாலிவுட் நடிகரும் இயக்குநருமான டைகா வைட்டிடி (Taika Waititi) 'மார்வல் படங்களை இயக்க நான் ஒருபோதும் ஆர்வம் காட்டியதில்லை. வறுமையின் காரணமாகத்தான் அந்தப் படங்களை எடுக்க ஒத்துக்கொண்டேன்' என நகைச்சுவை வலையொலி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஜோ ஜோ ராபிட், தோர்: ராக்னராக், தோர்: லவ் அண்டு தண்டர் போன்ற பிரபலமான திரைப்படங்களை இயக்கியவர் டைகா வைட்டிடி. 'தோர்' திரைப்படத்தின் மூலம் மார்வலுடன் அறிமுகமானார். வலையொலி ஒன்றில் பேசிய அவர் 'எனக்கு சிறுவயதிலிருந்தே தோர் காமிக்ஸ் பிடித்ததில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் 'மார்வல் நிறுவனம், தோர் திரைப்படத்திற்காக என்னை அனுகியபோது, இந்தப் படத்தை வேறு யாரும் எடுக்க முன்வரவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். அப்போதுதான் எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்தது. வறுமையில் இருந்தேன். எனவே இது என் குழந்தைகளை நல்லபடியாக வளர்க்கச் சரியான வாய்ப்பாக இருக்கும் எனப் படத்தை எடுக்க ஒத்துக்கொண்டேன்' எனக் கூறியுள்ளார். 

இதற்கு மேல் மார்வல் படங்களை இயக்க எந்த திட்டமும் இல்லை எனவும் அடுத்த தோர் படத்திற்கு வேறு இயக்குநரைத் தேர்வு செய்தாலும் நான் கவலைப்பட மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் 'எனக்கு மார்வல் நிறுவனத்தை மிகவும் பிடிக்கும். அவர்களது அனைத்து படங்களும் வெற்றியைத் தர வேண்டும் என விரும்புகிறேன்' எனவும் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com