இதுவரை 97 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

ஹமாஸ் படையினர் கடத்தி வைத்திருந்த 97 பிணைக் கைதிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் விடுவித்த பிணைக் கைதிகள்
ஹமாஸ் விடுவித்த பிணைக் கைதிகள்

ஹமாஸ் படையினர் கடத்தி வைத்திருந்த 97 பிணைக் கைதிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் படையினர் பெண்கள், குழந்தைகள் உள்பட 240-க்கும் அதிகமானோரை கடத்திச் சென்றனர்.

அவர்களை மீட்கவும், ஹமாஸை அழிக்கவும் இஸ்ரேல் படையினர் காஸா நகரின் மீது ஒரு மாதத்துக்கும் மேல் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, கத்தார் நாட்டின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 50 பிணைக் கைதிகளை விடுவிக்க 4 நாள்கள் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ஹமாஸ் படையினருக்கு இஸ்ரேலுக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, கடந்த புதன்கிழமை முதல் 4 நாள்களுக்கு 50 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து, கூடுதலாக ஒவ்வொரு நாள் போர் நிறுத்துவதற்கு 10 பிணைக் கைதிகள் விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை வரை 81 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவித்திருந்தனர்.

இந்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவு இஸ்ரேல் நாட்டின் பெண்கள், குழந்தைகள் 10 பேர், தாய்லாந்தின் 4 பேர், ரஷியாவின் 2 பேர் என மொத்தம் 16 பேரை ஹமாஸ் விடுதலை செய்தது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் சிறைகளில் உள்ள 30 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு வியாழக்கிழமை அதிகாலை விடுதலை செய்துள்ளது.

மேலும் சில நாள்கள் போர் நிறுத்தத்தை நீட்டித்து பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க இஸ்ரேல் அரசு முனைப்பு காட்டி வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com