ஆட்டோமொபைல் துறையில் முதலிடமே இந்தியாவின் இலக்கு: நிதின் கட்கரி

ஆட்டோமொபைல் துறையில், இந்தியா முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதே இலக்கு என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ஆட்டோமொபைல் துறையில் முதலிடமே இந்தியாவின் இலக்கு: நிதின் கட்கரி

வரும் 2027ஆம் ஆண்டுக்குள், ஆட்டோமொபைல் துறையில் சீனத்தை பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதே இலக்கு என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

பராகுவேவில் நடைபெற்ற 27வது உலக சாலை மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இவ்வாறு கூறினார்.

இன்னும் 3 - 4 ஆண்டுகளில், உலகிலேயே மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். புது தில்லியில் அமையவிருக்கும் ஊரக விரிவாக்கச் சாலைகள், சுற்றுச் சாலைகள் குறித்த தகவலையும் அவர் பகிர்ந்து கொண்டார். இந்த சாலைகள் இன்னும் 2-3 மாதங்களில் திறக்கப்படும் என்றும், இது அமைக்கப்பட்டால், தலைநகரில் அமைந்துள்ள விமான நிலையத்தை விரைவாக அடையலாம் என்றும் அறிவித்துள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும், இந்திய ஆட்டோமொபைல் துறை பல மடங்கு உயர்வை அடைந்திருப்பதாகக் குறிப்பிட்ட நிதின் கட்கரி, கடந்த ஆண்டு, ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்ததாகவும், தற்போது அமெரிக்கா மற்றும் சீனாவை முந்துவதே இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com