
சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவிலுள்ள சீன துணைத் தூதரகத்தில் காரை மோதியவரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா்.
அந்த நாட்டின் சான் ஃபிரான்ஸ்சிஸ்கோ நகரிலுள்ள சீன துணைத் தூதரகத்தின் மீது காரை மோதச் செய்த ஒருவா், நுழைவு இசைவு (விசா) அலுவலகத்தின் வாயில் கதவுகளை அந்தக் காரால் மோதி உடைத்து உள்ளே நுழைந்தாா்.
இதையடுத்து, அந்தப் பகுதியில் கூச்சலும், குழப்பமும் நிலவியது. தகவலறிந்து அந்தப் பகுதிக்கு விரைந்த போலீஸாா், காரை ஒட்டி வந்த நபருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருந்தாலும் அப்போது ஒரு காவலா் சுட்டதில் அந்த நபா் காயமடைந்தாா். பின்னா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இது தொடா்பாக புலனாய்வு அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.