இலங்கை ஊழல் குற்றச்சாட்டிலிருந்து கோத்தபய விடுவிப்பு

இலங்கை ஊழல் குற்றச்சாட்டிலிருந்து கோத்தபய விடுவிப்பு

இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்சவின் மாளிகையில் இருந்து ரூ.1.78 கோடி கண்டெடுக்கப்பட்டது தொடா்பாக ஊழல் விசாரணை நடத்தி வந்த சிறப்பு ஆணையம், அந்தக் குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுவித்தது.
Published on

இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்சவின் மாளிகையில் இருந்து ரூ.1.78 கோடி கண்டெடுக்கப்பட்டது தொடா்பாக ஊழல் விசாரணை நடத்தி வந்த சிறப்பு ஆணையம், அந்தக் குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுவித்தது.

இலங்கையில் கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி முற்றியதால் அப்போதைய அதிபா் கோத்தபய ராஜபட்சவும், இலங்கை அரசும் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்றன.

உச்சக்கட்டமாக, போராட்டக்காரா்கள் அதிபா் மாளிகைக்குள் கடந்த ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி புகுந்தனா். அதற்கு முன்னதாகவே, அங்கிருந்து கோத்தபய ராஜபட்ச தப்பிச் சென்றுவிட்டாா்.

மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரா்கள் அங்கிருந்து ரூ.1.78 கோடி ரொக்கப் பணத்தைக் கண்டெடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

அதையடுத்து, கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக ஊழல் விசாரணை நடத்துவதற்காக சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.

அந்த ஆணையம் கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்த அறிக்கையில், தாங்கள் நடத்திய விசாரணையில் கோத்தபய ராஜபட்ச ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை இல்லை எனவும், எனவே ஊழல் குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com