போர் எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வாகாது: போப் பிரான்சிஸ்

போர் எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வாகாது. அனைத்துத் தரப்பினரும் ஆயுதங்களைக் கீழே போடுமாறும்
போர் எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வாகாது: போப் பிரான்சிஸ்

காஸாவின் மனிதாபிமான நிலைமை குறித்து கவலை தெரிவித்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், போர் எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வாகாது. அனைத்துத் தரப்பினரும் ஆயுதங்களைக் கீழே போடுமாறும், அனைத்து கிறிஸ்தவர்களும் உலக அமைதிக்காக அக்டோபர் 27-ஆம் தேதி நோன்பு இருந்து பிரார்த்தனை செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

காஸா பகுதியில் கடந்த 7-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் தாக்குதல்களில் இதுவரை 3,473 போ் உயிரிழந்துள்ளனா்; சுமாா் 12,500 போ் காயமடைந்துள்ளனா். உயிரிழந்தவா்களில் செவ்வாய்க்கிழமை இரவு காஸாவில் கிறிஸ்தவ சேவை மையத்தால் நடத்தப்படும் அல்-ஆஹ்லி மருத்துவமனை தாக்குதலில் இறந்த 471 பேரும் அடங்குவா் என்று அங்குள்ள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிா்வலைகளை எழுப்பியது. இதற்குக் கண்டனம் தெரிவித்து.

இதனிடையே, காஸா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றன. காஸாவிலிருந்து வீசப்பட்ட ராக்கெட் தவறுதலாக அருகே உள்ள மருத்துவமனை மீது விழுந்தது என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியது.

இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபா் பைடனுடனான சந்திப்பை பாலஸ்தீனம், ஜோா்டான், எகிப்து நாடுகளின் அதிபா்கள் புதன்கிழமை ரத்து செய்தனா். இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போா் இஸ்லாமிய நாடுகளுக்கு விரிவடைவதைத் தடுக்கும் நடவடிக்கையாக பைடன் நெதன்யாகுவிடம் பேச்சுவாா்த்தை நடத்தினார். 

இதையடுத்து போரால் கடந்த 11 நாள்களாக முற்றிலும் முடக்கப்பட்டுள்ள காஸா முனையில் மனிதாபிமான உதவிகள் அளிக்க இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில், காஸாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது மற்றும் காஸாவின் நிலைமை அவநம்பிக்கையானது. போர் எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வாகாது. அனைத்துத் தரப்பினரும் ஆயுதங்களைக் கீழே போடுமாறு போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து போப் பிரான்சிஸ் பேசுகையில்,  பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் என இருதரப்பினர் குறித்தும் நான் யோசிக்கிறேன்.  "உலகம் ஏற்கனவே பல வெளிப்படையான போர் முனைகளுக்கு சாட்சியாக உள்ளது," காஸாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது மற்றும் காஸாவின் நிலைமை அவநம்பிக்கையானது. "ஒரு மனிதாபிமான பேரழிவைத் தவிர்க்க முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்" என்று கூறினார்.

அனைத்துத் தரப்பினரும் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, ஏழைகள், மக்கள் மற்றும் அப்பாவி குழந்தைகளின் அமைதிக்கான அழுகைகளுக்கு செவிசாய்க்க" வேண்டும் என்று அவர் கெஞ்சினார்.

போர் தீர்வாகாது
"போர் எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வாகாது," என்றவர் "அது மரணத்தையும் அழிவையும் மட்டுமே விதைக்கக்கூடியது, வெறுப்பை அதிகரிக்கிறது, பழிவாங்கலைப் பெருக்குகிறது. போர் எதிர்காலத்தை அழிக்கிறது."

இரு தரப்பிலும் மோதல் விரவடைவது கவலைக்குரியது. ஒரு மனிதாபிமான பேரழிவைத் தவிர்க்க முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். ஆயுதங்கள் மௌனமாகட்டும். அமைத்திக்கான முழக்கம் ஏழைகளிடம் இருந்தும், மக்களிடம் இருந்தும், குழந்தைகளிடம் இருந்தும் கேட்கட்டும்.

உலக அமைதிக்காக பிரார்த்தனை
உலக அமைதிக்காக, வெள்ளிக்கிழமை (அக். 27) நோன்பு இருந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள போப்,  வெவ்வேறு கிறிஸ்தவ பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், பிற மதங்கள் மற்றும் அமைதிக்காக வாதிடும் அனைவரையும் தங்களுக்கு ஏற்றவாறு பிரார்த்தனையில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com