பிணைக் கைதிகள் பத்திரமாக நாடு திரும்ப சிறப்புப் பிரார்த்தனை

ஹமாஸ் படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்று சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.
பிணைக் கைதிகள் பத்திரமாக நாடு திரும்ப சிறப்புப் பிரார்த்தனை


டெல் அவிவ்: இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில், வியாழக்கிழமையன்று வெஸ்டர் வால் பகுதியில் கூடிய மக்கள், ஹமாஸ் படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்று சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.

பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டபோது, இப்படியொரு சிறப்புப் பிரார்த்தனைக் கூட்டம் ஜெரூசலேமில் நடைபெற்றது.

இந்த பிரார்த்தனைக் கூட்டத்தில், இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்களின் நலனை வலியுறுத்தியும் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், காஸா பகுதியில் இஸ்ரேலிலிருந்து 203 பிணைக் கைதிகள் வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிக்க.. பேரிடர் ஒத்திகை: சிறப்பு ஒலியுடன் செல்லிடபேசிகளுக்கு வரும் குறுந்தகவல்

இஸ்லாமியர்களால் ‘அல்-ஹராம் அல்-ஷரீஃப்’ என்றும், யூதர்களால் ‘டெம்பிள் மவுண்ட்’ என்றும் அழைக்கப்படும் புனிதத் தலம், ஜெரூசலேமின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த வளாகத்தில்தான் இஸ்லாமியர்களின் ‘அல்-அக்ஸா மசூதி’யும்  யூதர்களின் வழிபாட்டுச் சுவர் உள்ளது. இந்தப் பகுதியில்தான் இந்த சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.

இஸ்லாமியர்களை பொருத்தவரை நபிகள் பயணத்தில் ஜெரூசலேம் இடம்பெற்றதாகக் கூறப்படுவதால் மெக்கா, மதீனாவுக்கு பிறகு மூன்றாவது முக்கிய வழிபாட்டுத் தலமாக அல்-அக்ஸாவைக் கருதுகின்றனர்.

6-ஆம் நூற்றாண்டு முதல் அப்பகுதியில் இஸ்லாமியர்கள் வழிபாடு செய்து வரும் நிலையில், கடைசியாக 10-ஆம் நூற்றாண்டில் தற்போதுள்ள அல்-அக்ஸா மசூதி கட்டப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com