ஜோ பைடனுடன் போப் பிரான்சிஸ் தொலைபேசியில் பேச்சு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன்  கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் தொலைபேசியில் பேசினார்.
ஜோ பைடனுடன் போப் பிரான்சிஸ் தொலைபேசியில் பேச்சு!


அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன்  கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் தொலைபேசியில் பேசினார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் செய்ய முயற்சி எடுக்குமாறு போப் வலியுறுத்தினார். 

ஹமாஸ் படையினர் எல்லைத் தாண்டி இஸ்ரேல் மீது கடந்த அக். 7ல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. 

இந்த நிலையில், போப் பிரான்சிஸ் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் பேசினார். 

அப்போது, காஸாவில் மோசமான மனிதாபிமான நிலைமை மற்றும் அங்குள்ள அல்-ஆஹ்லி மருத்துவமனை தாக்குதல் மற்றும் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பாரிஷ் குண்டுவெடிப்புகள் குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.

காஸா- எகிப்து  இடையே உள்ள ஒரே எல்லையான ரஃபா எல்லை திறக்கப்படவும், மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வரவும், பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். உக்ரைனில் ரஷியாவின் தற்போதைய போரையும் அவர் நினைவு கூர்ந்தார்.

மேலும், போர் எப்போதும் ஒரு தோல்வி, அது மனித சகோதரத்துவத்தின் அழிவு. சகோதரர்களே, போரை நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்! 

20 நிமிடங்கள் பைடனுடன் பேசிய போப் பிரான்சிஸ், உலகில் பல்வேறு மோதல்கள் மற்றும் அமைதிக்கான பாதைகளை அடையாளம் காண வேண்டியதன் அவசியம் குறித்து பைடனுடன் பேசினார். உலகம் அமைதியை நோக்கி திரும்புவதற்கான கூட்டு முயற்சி எடுக்குமாறு போப் வலியுறுத்தினார். 

போர் எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வாகாது. அனைத்துத் தரப்பினரும் ஆயுதங்களைக் கீழே போடுமாறும், அனைத்து கிறிஸ்தவர்களும் உலக அமைதிக்காக அக்டோபர் 27-ஆம் தேதி நோன்பு இருந்து சிறப்பு பிரார்த்தனை செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com