
அமெரிக்க- கனடா நடிகர் மேத்யூ பெர்ரி, பிரண்ட்ஸ் தொடர் மூலமாக உலகளவில் புகழ்பெற்றவர். மிகக் கடுமையான போதை பழக்கமும் அதிலிருந்து மீள அவர் எடுத்து கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளையும் தனது சுயவரலாற்று புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
’நண்பர்கள், காதலர்கள் மற்றும் மிகப் பெரிய தவறு’ எனத் தலைப்பிடப்பட்ட மேத்யூவின் புத்தகம், கடந்த ஆண்டு வெளியானது.
போதை பழக்கத்தில் இருந்து மீள 15 முறைக்கும் அதிகமாக மறுவாழ்வு சிகிச்சைக்கு சென்றுள்ளார். லட்சக்கணக்கான பணம் சிகிச்சைக்காக மட்டும் செலவு செய்துள்ளார்.
புகழின் உயரத்தையும் அதள பாதாளத்தையும் தான் பார்த்த கதையை அவர் தன் புத்தகத்தில் விவரித்துள்ளார்.
போதை பழக்கம் பற்றி குறிப்பிடும்போது “என்னுடைய போதை பழக்கமே எனக்கு சிறந்த நண்பன், என்னைத் தண்டிப்பவன் மற்றும் காதலன், எல்லாமுமாக அதுவே இருக்கிறது. என் வாழ்வின் மிகப்பெரிய தவறு” என எழுதியுள்ளார்.
இதையும் படிக்க: பிரண்ட்ஸ் தொடர் புகழ் மேத்யூ பெர்ரி மறைவு!
அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற பிரண்ட்ஸ் தொடரில் நடித்ததைக் குறித்தும் அவர் எழுதியுள்ளார்.
சீசன் 9 படப்பிடிப்பின் போது முழுமையாகவே நிதானமின்றி இருந்ததையும் அது தனது நண்பர்களுக்கு எவ்வாறு தொந்தரவாக மாறியது என்பதையும் பேசுகிறார்.
”நான் இறந்தால், அது நண்பர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கக் கூடும், ஆனால் யாரும் எதிர்பாராததாக இருக்காது. இதனோடு வாழ்வது அதிபயங்கரமான ஒன்று” என்று எழுதுகிற மேத்யூ 54 வயதில் இறந்துள்ளார்.
போதை பழக்கத்தினால் அழிந்த கதையை அவர் வாழ்வு சொல்கிறது. அந்தப் புத்தகத்தை அவரைப் போல போதை பழக்கத்தினால் சிக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு சமர்ப்பித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.