ஓராண்டில்... சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த 42,000 இந்தியர்கள்!

அமெரிக்காவில் கடந்த ஓராண்டில் மட்டும் 42,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஓராண்டில்... சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த 42,000 இந்தியர்கள்!
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் கடந்த ஓராண்டில் மட்டும் 42,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் சட்டவிரோத நுழைவு தொடர்பாக நியூ யார்க்கின் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிகை நிறுவனம் வெளியிடுள்ள தரவுச் செய்தியில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. 

அந்தத் தரவுகளின்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. 

இதில், பெரும்பாலானோர் புகலிடம் தேடி அமெரிக்காவுக்கு வருவதாகவும், இதற்கு முன்பு அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்து வேலை செய்து வருவோரின் தூண்டுதலின்பேரில் அதேபோன்று நுழைந்து வேலைவாய்ப்புகளைப் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எல்லையைக் கடந்து நுழைய வெளிநாட்டுப் பயண முகவர்களும், போதைப்பொருள் கடத்துபவர்களும் குறிப்பிட்டத் தொகையை பெற்றுக்கொண்டு உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2023 அக்டோபர் மாதம் வரையில், சர்வதேச அளவில் எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக நுழைந்ததாக 2 மில்லியன் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com