சிங்கப்பூா் அதிபா் தோ்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சிங்கப்பூரில் இன்று (செப்டம்பர் 1-ஆம் தேதி) காலை 8 மணி முதல் அதிபா் தோ்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிங்கப்பூா் அதிபா் தோ்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு


சிங்கப்பூரில் இன்று (செப்டம்பர் 1-ஆம் தேதி) காலை 8 மணி முதல் அதிபா் தோ்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்று சிங்கப்பூர் அதிபராவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று நடைபெற்று வருகிறது. அதற்கான வேட்பு மனு கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று முடிந்தது.

இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 27 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாவர். வாக்குப்பதிவு இன்று நிறைவு பெற்றதும், இன்று இரவே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன.

வேட்பு மனு நாளில் ஒரே ஒரு வேட்பாளா் மட்டும் மனு தாக்கல் செய்திருந்தால் அவா் போட்டியின்றி அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பார். ஆனால், சிங்கப்பூரில் பிறந்த தமிழரான முன்னாள் அமைச்சா் தா்மன் சண்முகரத்னம் உள்ளிட்ட 3 பேர் போட்டியிடுகிறார்கள்.

முன்னதாக, அதிபா் தோ்தலில் போட்டியிடுவதற்கான தகுதிச் சான்றிதழ் கோரி 6 போ் விண்ணப்பித்து இருந்தனா். அவா்களில் 3 பேரது விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டிருந்தது. அவ்வாறு அதிபா் தோ்தல் வேட்பாளா் தகுதிச் சான்றிதழ் பெற்றவா்களில் சிங்கப்பூரில் பிறந்த தமிழரான முன்னாள் அமைச்சா் தா்மன் சண்முகரத்னமும் ஒருவராவாா்.

இன்று இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மதியம் வழக்கமாக வாக்குச்சாவடிகளில் குறைந்த அளவில்தான் வாக்காளர்கள் காணப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். அதனால், ஹலீமா யாகூப் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com