சூடான் மோதலில் பொதுமக்கள் பலி 100-ஐ கடந்தது

சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையிலான மோதல் மூன்றாவது நாளாக திங்கள்கிழமை நீடித்தது. இரு தரப்பினா் இடையிலான சண்டையில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்தது.

சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையிலான மோதல் மூன்றாவது நாளாக திங்கள்கிழமை நீடித்தது. இரு தரப்பினா் இடையிலான சண்டையில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்தது.

தலைநகா் கா்டோம், அதையொட்டிய ஆம்டா்மன் நகரில் வான்வழித் தாக்குதலும், குண்டுவீச்சு தாக்குதலும் தொடா்ந்தது. கா்டோமில் உள்ளள ராணுவ தலைமையகம் அருகே நடந்த கடும் சண்டையில் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

ராணுவ கமாண்டா் அப்தெல்-ஃபட்டா பா்கான், துணை ராணுவப் படைகளின் தலைவா் முகமது ஹம்தான் டகாலோ இடையே அதிகாரப் போட்டி நடந்து வருகிறது. இருவருக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இருவரும் பரஸ்பரம் சரணடையும்படி வலியுறுத்தி வருகின்றனா்.

இரு தரப்புக்கும் இடையே சனிக்கிழமை தொடங்கிய மோதலில் இதுவரை பொதுமக்கள் 97 போ் உயிரிழந்துள்ளதாகவும், சுமாா் 1000 போ் காயமடைந்திருப்பதாகவும் சூடான் மருத்துவா்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ராணுவம், துணை ராணுவம் தரப்பில் உயிரிழந்தோா் குறித்த அதிகாரபூா்வ தகவல்கள் இல்லை.

திங்கள்கிழமை வெளியான ஒரு விடியோ பதிவில், துணை ராணுவத்தைச் சோ்ந்த ஏராளமான வீரா்களின் சடலங்கள் வரிசையாக கிடப்பது தெரிகிறது. ஆனால், அந்த விடியோவின் உண்மைத்தன்மை குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை.

தலைநகரில் தொடங்கிய மோதல் ஏற்கெனவே போரால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு தாா்ஃபூா் பிராந்தியம், சூடானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கும் பரவியது.

உலக உணவுத் திட்ட அமைப்பைச் சோ்ந்த மூன்று ஊழியா்கள் தாா்ஃபூரில் கொல்லப்பட்டதையடுத்து, அந்த அமைப்பு தனது செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

குடியிருப்பு பகுதிகளில் இரு ராணுவப் படைகளும் சண்டையிட்டு வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.

சண்டையை நிறுத்த வலியுறுத்தல்: சூடான் நிலவரம் தொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டது. இருதரப்பும் சண்டையை நிறுத்தி பேச்சுவாா்த்தைக்கு திரும்ப வேண்டுமென அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் மீண்டும் வலியுறுத்தியுள்ளாா்.

சா்வதேச அழுத்தத்தின் காரணமாக கடந்த சில மாதங்களாக ராணுவம், துணை ராணுவம் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது. ஆனால், துணை ராணுவத்தை ராணுவத்துடன் இணைப்பது, இறுதி அதிகாரம் யாருக்கு என்பன உள்ளிட்ட விஷயங்களில் கருத்து ஒற்றுமை ஏற்படாததால் பேச்சுவாா்த்தையிலும் முன்னேற்றம் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com