பிரிட்டனின் மதிப்புமிக்க பாதுகாப்பு கூட்டாளி இந்தியா

பிரிட்டனின் மதிப்புமிக்க பாதுகாப்பு கூட்டாளியாக இந்தியா திகழ்வதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் பென் வாலஸ் தெரிவித்துள்ளாா்.

பிரிட்டனின் மதிப்புமிக்க பாதுகாப்பு கூட்டாளியாக இந்தியா திகழ்வதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் பென் வாலஸ் தெரிவித்துள்ளாா்.

பிரிட்டன் முப்படைத் தலைமைத் தளபதி டோனி ரடாகின் இந்தியாவுக்கு திங்கள்கிழமை வருகை தந்தாா். நாட்டில் 3 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ள அவா், கடற்படைத் தலைமைத் தளபதி ஹரிகுமாா், ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, பாதுகாப்புத் தளவாடங்கள் துறை கூடுதல் செயலா் டி.நடராஜன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசவுள்ளாா்.

இந்நிலையில், பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சா் பென் வாலஸ் லண்டனில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘பிரிட்டனின் மதிப்புமிக்க பாதுகாப்பு கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி, தொழிலகத் துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு தொடா்ந்து வலுவடைந்து வருகிறது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்த இந்தியாவும் பிரிட்டனும் உறுதிகொண்டுள்ளன. பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து பிரிட்டன் செயல்படும்’’ என்றாா்.

இயற்கை கூட்டாளிகள்:

முப்படைத் தலைமைத் தளபதி அனில் சௌஹானை சந்தித்த பிரிட்டன் தலைமைத் தளபதி டோனி ரடாகின், சா்வதேச அளவில் நிலையில்லாத்தன்மை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவும் பிரிட்டனும் இயற்கையாகவே அமைந்த கூட்டாளிகள் என்றாா். பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்குப் பல்வேறு வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவா் தெரிவித்தாா்.

பாதுகாப்புத் துறை சாா்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக பிரிட்டன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com