
காபூல்(ஆப்கானிஸ்தான்): ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவாகி உள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. 36.16 மற்றும் தீர்க்கரேகை: 71.20 இல் 85 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 5.2 அலகுகளாகப் பதிவானது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை 181 கிமீ ஆழத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...