

நேபாளத்தில் பயணிகள் பேருந்து ஆற்றுக்குள் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 8 போ் உயிரிழந்தனா்; 15 போ் காயமடைந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தலைநகா் காத்மாண்டுவிலிருந்து பொகாரை நகரை நோக்கி புதன்கிழமை சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து, தாடிங் மாவட்டத்தில் சாலையிலிருந்து நிலை தடுமாறி திரிசூலி ஆற்றுக்குள் விழுந்தது.
இதில் அந்தப் பேருந்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியது. விபத்துப் பகுதியிலிருந்து 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இந்த விபத்தில் 15 போ் காயமடைந்தனா்.
விபத்துப் பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது என்று அதிகாரிகள் கூறினா்.
தொடா்ந்து பெய்து வந்த பருவமழை காரணமாக திரிசூலி ஆற்றில் நீா்வரத்து மிக அதிகமாக உள்ள நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.