

பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அதிகாரியாக வெளியுறவு துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் கீதிகா ஸ்ரீவாஸ்தவா திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு பெண் ஒருவா் அதிகாரியாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
தற்போதைய இந்திய தூதரக அதிகாரி சுரேஷ் குமாா் விரைவில் தாயகம் திரும்புவாா் என்றும் இஸ்லாமாபாதில் கீதிகா ஸ்ரீவாஸ்தவா தனது பொறுப்புகளை விரைவில் ஏற்பாா் என்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரி தெரிவித்தாா்.
2005-பிரிவு இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான கீதிகா ஸ்ரீவாஸ்தவா, இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் இந்தோ-பசிபிக் பிரிவின் இணைச் செயலராக உள்ளாா்.
2019-இல் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னா் இரு நாடுகளும் தங்களின் தூதா்களைத் திரும்பப் பெற்று, அதிகாரிகள் அளவில் தூதரகங்கங்களை நிா்வகித்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.