மீண்டும் தொடங்கும் போர்!

போர் நிறுத்த காலம் முடிவடைந்த நிலையில் இஸ்ரேல் காஸா மீது மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.
சிதைந்த காஸா பகுதி
சிதைந்த காஸா பகுதி

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம், வெள்ளிகிழமை அதிகாலையோடு முடிவடைந்த நிலையில் மீண்டும் போர்த் தொடங்கவுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஹமாஸ் போர் நிறுத்த விதிகளை மீறியுள்ளதாகவும் அதனால் இஸ்ரேல் மீண்டும் காஸா பகுதியில் தாக்குதலைத் தொடங்கவுள்ளதாகவும் தெரித்துள்ளது.

ஆரம்பத்தில் நான்கு நாள்கள் தொடங்கிய போர் நிறுத்தம் அதன் பிறகு 2 நாள்களுக்கு நீடிக்கப்பட்டது. இதனை நீடிக்க மத்தியஸ்தர்கள் கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்கா, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

எந்தவிதமான நீட்டிப்புக்கான அறிகுறியும் தென்படாத சூழலில் வடக்குக் காஸாவில் துப்பாக்கிச் சூடும் குண்டுவீச்சும் நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் ராணுவம், காஸாவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றை இடைமறித்ததாகத் தெரிவித்துள்ளது.

அந்த ஏவுகணை ஹமாஸால் தவறுதலாக தாக்கப்பட்டு இருக்கலாம் எனவும் இஸ்ரேலுக்கு அழுத்தம் அளித்து போர் நிறுத்தத்தை நீடிக்க செய்வதற்கான முயற்சியாக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை ஹமாஸ் 83 இஸ்ரேலியர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்டவர்களையும் 23 தாய்லாந்து மற்றும் பிலிப்பினோ நாட்டைச் சேர்ந்தவர்களையும் தனது பிடியில் இருந்து விடுவித்துள்ளது. இவர்களில் பெண்கள், குழந்தைகள், ஆண்களும் அடக்கம்.

இஸ்ரேல், மோதலில் ஈடுபட்ட பாலஸ்தீன இளைஞர்கள் உள்பட 240 பேரை விடுவித்துள்ளது. 

முன்னதாக வியாழக்கிழமை கிழக்கு ஜெருசலேமில் 2 பாலஸ்தீனர்கள், 6 இஸ்ரேலியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது இஸ்ரேலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com