இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்கரான உஷா ரெட்டி, கான்சாஸ் மாகாணத்தின் 22வது மாவட்டத்தின் செனட்டர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார்.
ஏற்கெனவே செனட்டராக பதவி வகிக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர், ஜனவரியில் டாம் ஹாக் விலகிய பிறகு இந்தப் பொறுப்பையேற்றார். தனது பதவிக்காலத்தை நீடிக்க ஜனவரி 2024-ல் போட்டியிடவுள்ளதாக எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அதில் அவர், 2024 கான்சாஸ் மாகாண செனட்டர் பதவிக்கு தாக்கல் செய்துள்ளேன். பொதுமக்கள் சேவை என்பது என் வாழ்வின் ஒரு பகுதி. செனட்டராக மக்கள் பணியில் எனது அர்ப்பணிப்பைத் தொடர்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
அவரது பதவிக் காலம் ஜன. 2025-ல் நிறைவடையும். மன நலம், பொதுக் கல்வி, பாதுகாப்பு, சமத்துவம், வேலை, பொருளாதார வளர்ச்சி, உள்கட்டுமானம், குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாக அவரது இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி ஆசிரியரான இவர், மேன்ஹேட்டன் நகரத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
2016, 2017 மற்றும் 2020 ஆகிய மூன்று முறை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உஷாவின் குடும்பம் 1973-ல் ஆந்திராவில் இருந்து இடம்பெயர்ந்து ஓஹியோவில் குடியேறியுள்ளது.
இதையும் படிக்க: அமெரிக்க அதிபர் தேர்தலுக்குத் தயாராகும் ஜோ பைடன்!
உளவியல் மற்றும் கல்வி தலைமைத்துவத்தில் இவர் முதுகலை பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.