மேற்குக் கரையில் 6 பாலஸ்தீனர்கள் பலி

இஸ்ரேல், காஸாவின் நகர்ப்புற அகதிகள் முகாம் மற்றும் மேற்குக் கரை பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ராணுவ வீரர்களுடன்...| AP
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ராணுவ வீரர்களுடன்...| AP

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 6 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவின் அதிக மக்கள் திரள் கொண்ட அகதிகள் முகாமில் தனது தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது இஸ்ரேல்.

நுஸைரத் உள்ளிட்ட நகர்ப்புற அகதிகள் முகாமில் குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 1948-ஆம் ஆண்டில் இஸ்ரேல் உருவானபோது, அந்நாட்டில் இருந்து துரத்தப்பட்ட பாலஸ்தீனர்கள் குடியேறிய நகரங்கள் இவை.

பாலஸ்தீனர்களின் உடல்களை ஏற்றிச் செல்லும் வாகனம் | AP
பாலஸ்தீனர்களின் உடல்களை ஏற்றிச் செல்லும் வாகனம் | AP

இதுவரை 20 ஆயிரம் பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள். 

அக்.7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள், வெளிநாட்டவர்கள் பலியாகினர். 240 பேர் ஹமாஸால் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களில் 110 பேர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியவர்கள் ஹமாஸின் பிடியில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com