30,000 பணியாளர்களை நீக்கும் கூகுள்? செய்யறிவு தொழில்நுட்பம் காரணமா?

கூகுள் நிறுவனம் 30,000 பணியாளர்களை நீக்கிவிட்டு செய்யறிவு தொழில்நுட்பத்தை பணியமர்த்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
கோப்புப்படம்.
கோப்புப்படம்.

கூகுள் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் 30,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட செய்யறிவு தொழில்நுட்பங்கள் மூலம் அந்த பணியிடங்கள் நிரப்பப்படவிருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கூகுள் நிறுவனத்தின் விளம்பர விநியோகப் பிரிவில் 30,000 பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுளின் அமெரிக்கா மற்றும் உலக பங்காளர்களின் தலைவரான சான் டௌனி, விளம்பர விநியோகப் பிரிவில் புதிய மாற்றங்களைக் கொண்டுவரப் போவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

அந்த 30,000 பணியாளர்களின் வேலையை கூகுளின் சில செய்யறிவு தொழில்நுட்பங்கள் மூலம் எளிதாக செய்துமுடிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. 

இந்த ஆண்டின் துவக்கத்தில் 12,000 பணியாளர்களை கூகுள் நீக்கியிருந்தது. கூகுள் வரலாற்றில் அதிக அளவிலான பணியாளர்கள் நீக்கப்பட்ட முடிவாக அது கருதப்பட்டது. அதுகுறித்து பேசிய கூகுளின் நிறுவனர் சுந்தர் பிச்சை 'அது கடினமான முடிவுதான், ஆனால் அது கட்டாயமாக எடுக்கபட வேண்டிய முடிவும் கூட' எனத் தெரிவித்திருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com