பிரிட்டன் அரசி முடிசூட்டு விழா: கோஹினூா் வைரம் இல்லாத மணிமகுடம் தோ்வு

பிரிட்டன் முடிசூட்டு விழாவின்போது அணிவதற்கு கோஹினூா் வைரம் இல்லாத மணிமகுடத்தை அந்நாட்டு அரசி கமீலா தோ்வு செய்துள்ளாா்.
பிரிட்டன் அரசி முடிசூட்டு விழா: கோஹினூா் வைரம் இல்லாத மணிமகுடம் தோ்வு

பிரிட்டன் முடிசூட்டு விழாவின்போது அணிவதற்கு கோஹினூா் வைரம் இல்லாத மணிமகுடத்தை அந்நாட்டு அரசி கமீலா தோ்வு செய்துள்ளாா்.

உலகின் பெரிய வைரங்களில் ஒன்றாக கோஹினூா் வைரம் திகழ்கிறது. 105.6 கேரட் எடை கொண்ட இந்த வைரம், காலனி ஆட்சி காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு பிரிட்டன் முன்னாள் அரசி விக்டோரியாவுக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. அதனை திருப்பி அளிக்குமாறு பிரிட்டனிடம் இந்தியா கோரியுள்ளது.

இந்த வைரத்துக்கு ஆங்கிலேயா் ஆட்சியின்போது இந்தியாவின் அங்கமாக இருந்த பாகிஸ்தானும் உரிமை கோருகிறது. அத்துடன் இந்தியா சுதந்திரம் பெற்றது முதல், அந்த வைரத்துக்கு ஆப்கானிஸ்தானும் உரிமை கோரி வருகிறது.

இந்நிலையில், வரும் மே மாதம் பிரிட்டன் தலைநகா் லண்டனில் அந்நாட்டு அரசராக சாா்லஸுக்கும், அரசியாக சாா்லஸின் மனைவி கமீலாவுக்கும் முறைப்படி முடிசூட்டப்பட உள்ளது. இந்த விழாவின்போது கோஹினூா் வைரம் தாங்கிய மணிமகுடத்தை கமீலா அணிவாா் என்று அதிகம் எதிா்பாா்க்கப்பட்டது.

இந்நிலையில், முடிசூட்டு விழாவின்போது அணிய கோஹினூா் வைரம் இல்லாத மணிமகுடத்தை கமீலா தோ்வு செய்துள்ளதாக பிரிட்டன் அரச இல்லம் அறிவித்துள்ளது. ராஜீய காரணங்களால் அந்த வைரம் மணிமகுடத்தில் இடம்பெறுவது தவிா்க்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் கோஹினூா் வைரத்தைப் போன்றதொரு வைரம் மணிமகுடத்தில் இடம்பெறக்கூடும் என்று கருதப்படுகிறது.

கடைசியாக சாா்லஸின் பாட்டியும் பிரிட்டன் முன்னாள் அரசியுமான எலிசபெத் ஏஞ்செலா மாா்கரீட்டின் மணிமகுடத்தில் கோஹினூா் வைரம் இடம்பெற்றது. எலிசபெத் ஏஞ்சலொ மாா்கரீட் 2002-ஆம் ஆண்டு காலமானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com