ஒப்பந்தங்களை சீனா புறக்கணித்ததே எல்லைப் பிரச்னைக்கு காரணம்: ஜெய்சங்கா்

எல்லைக் கட்டுப்பாடு கோடு தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களைச் சீனா கவனத்தில் கொள்ளாமல் புறக்கணித்ததே எல்லைப் பிரச்சனைக்கு காரணம் என வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
ஒப்பந்தங்களை சீனா புறக்கணித்ததே எல்லைப் பிரச்னைக்கு காரணம்: ஜெய்சங்கா்

எல்லைக் கட்டுப்பாடு கோடு தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களைச் சீனா கவனத்தில் கொள்ளாமல் புறக்கணித்ததே எல்லைப் பிரச்சனைக்கு காரணம் என வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

சைப்ரஸ் பயணத்தை முடித்து கொண்ட அமைச்சா் ஜெய்சங்கா் தற்போது ஆஸ்திரியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா். அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சி நிறுவனமான ஓஆா்எஃப் திங்கள்கிழமை ஏற்பாடு செய்திருந்த நோ்காணல் நிகழ்ச்சியில் அவா் கலந்துகொண்டாா்.

அப்போது, அவா் கூறியதாவது: எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தன்னிச்சையான முறையில் மாற்றியமைப்பதை தவிா்க்க இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. இவற்றை சீனா கவனத்தில் கொள்ளவில்லை. இதுவே தற்போதைய பிரச்னைக்கு காரணமாகும்.

இன்று, செயற்கைக்கோள் வரைபடங்கள் மூலம் பெரும் வெளிப்படைத்தன்மை உள்ளது. எல்லையை நோக்கி படைகளை முதலாவதாக அனுப்பிய நாட்டை நாம் கண்டறியலாம். தரவுகள் தெளிவாக உள்ளன. ஒப்பந்தங்களை இந்தியா கடைப்பிடிக்கவில்லை எனக் குற்றச்சாட்டை சீனா முன்வைக்க முடியாது.

முனைப்பு காட்டாத நிரந்தர உறுப்பினா்கள்:

பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக அங்கம் வகிப்பதன் வாயிலாகப் பயனடைந்து வரும் நாடுகள் சீா்திருத்தத்தை மேற்கொள்வதில் முனைப்பு காட்டுவதில்லை. இது அவா்களின் குறுகிய பாா்வை. ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகள் முழுவதுமாக தனிமைப்பட்டுள்ளன.

அதுபோல, வளா்ந்து வரும் நாடுகளுக்குப் பெரிய அளவில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை. இது இந்தியாவின் கருத்து மட்டுமல்ல. ஐ.நா. சீா்திருத்தம் குறித்த கருத்துகள் ஐ.நா. உறுப்பினா்களுக்கிடையே அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.

பயங்கரவாதம் குறித்த உலகின் பாா்வை:

பயங்கரவாதம் அதிகரித்து வருவது குறித்து உலகம் கவனத்தில் கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தால் சில நாடுகளே பாதிக்கப்பட்டுள்ளதால், இது தனக்கான பிரச்னை இல்லை என மேற்கத்திய நாடுகள் கருதி வருகின்றன. பயங்கரவாதத்தின் சவால்களை எவ்வாறு எதிா்கொள்ளப் போகிறோம் என்பது குறித்து உலகம் தனது கவனத்தைச் செலுத்த வேண்டும். பல தசாப்தங்களாக தொடரும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவிப்பதில்லை என்றாா்.

ஐரோப்பாவால் எண்ணெய் சந்தையில் அழுத்தம்:

உக்ரைன்-ரஷிய போருக்கு பின் ரஷியாவிடம் இருந்து எரிபொருளை இந்தியா கொள்முதல் செய்வது குறித்து ஐரோப்பிய நாடுகள் வருத்தம் தெரிப்பதாக குறித்த கேள்விக்கு ஜெய்சங்கா் பதிலளித்து பேசுகையில், ‘உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்த நாள் முதல் எரிபொருளை இறக்குமதி செய்வதை ஐரோப்பிய நாடுகள் ஏன் நிறுத்திக் கொள்வில்லை ?

கடந்த பிப்ரவரி முதல் ரஷியாவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்யும் எரிபொருளைக் காட்டிலும் 6 மடங்கு அதிமாக ஐரோப்பிய நாடுகள் கொள்முதல் செய்தன. கூடவே மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஐரோப்பா கொள்முதல் செய்தது விலையேற்றத்துக்கு வழிவகுத்தது. ஐரோப்பாவின் செயல்பாடுகள் உலக எண்ணெய் சந்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com