சீனாவுக்கு இலவச தடுப்பூசி கொடுக்க தயார்: ஐரோப்பிய யூனியன்

சீனாவுக்கு இலவசமாக தடுப்பூசி கொடுக்க தயாராக இருப்பதாக ஐரோப்பிய யூனியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு இலவச தடுப்பூசி கொடுக்க தயார்: ஐரோப்பிய யூனியன்

சீனாவுக்கு இலவசமாக தடுப்பூசி கொடுக்க தயாராக இருப்பதாக ஐரோப்பிய யூனியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

சீனாவில் தற்போது உருமாற்றமடைந்த பிஎஃப் 7 வகை கரோனா தொற்றால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சீனாவிலிருந்து வரும் சர்வதேச பயணிகளுக்கு அமெரிக்கா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். சீன பயணிகள் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய வகை கரோனாவை கட்டுப்படுத்த தேவையான கரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கவும், சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயாராக இருப்பதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com