அமெரிக்காவின் முதல் சீக்கிய நீதிபதியானார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா!

அமெரிக்காவின் முதல் சீக்கிய நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா சிங் பதவியேற்றார். 
அமெரிக்காவின் முதல் சீக்கிய நீதிபதியானார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா!
அமெரிக்காவின் முதல் சீக்கிய நீதிபதியானார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா!

அமெரிக்காவின் முதல் சீக்கிய நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா சிங் பதவியேற்றார். 

கடந்த வெள்ளியன்று டெக்சாஸில் உள்ள ஹாரிஸ் நாட்டின் உரிமையியல்(சிவில்) நீதிமன்றத்தின் நீதிபதியாக மோனிகா பதவியேற்றுள்ளார். 

ஹூஸ்டனில் பிறந்து வளர்ந்த மோனிகா தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெல்லாயரில் வசிக்கிறார். 20 ஆண்டுகளாக வழக்குரைஞராக இருந்த மோனிகா, உள்ளூர், மாநில மற்றும் தேசிய அளவில் பல சிவில் உரிமை அமைப்புகளில் ஈடுபட்டுள்ளார். 

பதவியேற்பு விழாவில் பேசிய மோனிகா கூறுகையில், 

ஹூஸ்டனை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  இதை ஒரு வரலாற்றுத் தருணமாக மாற்றியதற்கு அனைவருக்கும் நன்றி, 2 தசாப்த கால அனுபவத்தை நல்ல முறையில் பயன்படுத்த நான் தயாராக இருக்கிறேன் என்று மன்பிரீத் கூறினார். 

மாநிலத்தின் முதல் தெற்காசிய நீதிபதியான நீதிபதி ரவி சாண்டில் விழாவிற்குத் தலைமை தாங்கி உரையாற்றினார். அவர் கூறுகையில், 

சீக்கிய சமூகத்திற்கு இது ஒரு பெரிய தருணம். மன்பிரீத் சீக்கியர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து நிறமுள்ள பெண்களுக்கும் நல்ல தூதுவர் என்று அவர் கூறினார். 

உலகின் ஐந்தாவது பெரிய மதம் சீக்கியம். அமெரிக்காவில் 5,00,000 சீக்கியர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஹூஸ்டன் பகுதியில் மட்டும் 20,000 சீக்கியர்கள் வாழ்கின்றனர். 

மன்பிரீத் நாட்டில் முதல் பெண் சீக்கிய நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com