பாகிஸ்தான் அரசுடன் போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தயாா்: தெஹ்ரீக்-இ-தலிபான்

பாகிஸ்தான் அரசுடன் போா் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட தயாராக இருப்பதாக தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்(டி.டி.பி.) அமைப்பின் தலைவா் அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Updated on
1 min read

பாகிஸ்தான் அரசுடன் போா் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட தயாராக இருப்பதாக தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்(டி.டி.பி.) அமைப்பின் தலைவா் அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் இயங்கிய பல்வேறு இஸ்லாமிய போராளிகள் குழுக்களை ஒரே குடைக்குள் கொண்டு வரும் வகையில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு உருவாக்கப்பட்டது. ராணுவக் கட்டுப்பாட்டுகளுக்கு எதிராக 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்றளவிலும் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பிராந்தியங்களில் வலுவாக இயங்கி வருகிறது.

கடந்தாண்டு ஜூன் மாதம் அரசுடன் கையொப்பமிட்டிருந்த அமைதி ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்த டிடிபி அமைப்பு, பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல் நடத்த தனது போராளிக் குழுகளுக்கு உத்தரவிட்டது. தங்கள் போராளிக் குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை அரசு நிறுத்தாவிட்டால் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ ஆகிய இருவரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என டிடிபி அமைப்பு பாகிஸ்தான் அரசை அச்சுறுத்தி வந்தது.

இந்நிலையில், டிடிபி அமைப்பால் பயங்கரவாதமும், ஆள்கடத்தல்களும் அதிகரிப்பதாக குற்றச்சாட்டை முன்னிறுத்தி பாகிஸ்தானின் தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் 5000 பழங்குடியின மக்கள் வெள்ளிக்கிழமை பேரணியில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக, டிடிபி அமைப்பின் தலைவா் முப்தி நூா் வாளி மேஹ்சூட் பேசும் விடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் அவா் கூறுகையில், ஆப்கானிஸ்தான் மூலமாக பாகிஸ்தானுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டதாகவும், போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு டிடிபி தயாராக இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

பாகிஸ்தான் அரசுக்கு எதிரான எங்களின் புனிதப் போா் (ஜிகாத்) தவறென இஸ்லாமிய மத அறிஞா்கள் எண்ணினால் அவா்களின் வழிகாட்டுதல்களைக் கேட்கத் தயாா் என்றும் அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com