பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

நேபாள பயணிகள் விமான விபத்து: 32 உடல்கள் மீட்பு; தொடரும் மீட்புப் பணிகள்!

பத்து வெளிநாட்டினர் உள்பட 72 பேருடன் சென்ற நேபாள பயணிகள் விமானம் ஞாயிற்றுக்கிழமை பொக்ரா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விழுந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.

News image
Updated On :15 ஜனவரி 2023, 2:03 pm IST


காத்மாண்ட்:  பத்து வெளிநாட்டினர் உள்பட 72 பேருடன் சென்ற நேபாள பயணிகள் விமானம் ஞாயிற்றுக்கிழமை பொக்ரா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விழுந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இதில், குறைந்தது 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின்படி, எட்டி ஏர்லைன்ஸின் 9என்-ஏஎன்சி ஏடிஆர்-72 விமானம் 10 வெளிநாட்டினர் என 68 பயணிகள் மற்றும் நான்கு விமான ஊழியர்கள் என 72 பேருடன் காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10:33 மணிக்கு புறப்பட்டது.

இமயமலை தேசத்தின் முக்கிய சுற்றுலா தலமான பொக்ரா சென்ற எட்டி ஏர்லைன்ஸ் விமானம், பொக்ரா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, பழைய விமான நிலையத்துக்கும் புதிய விமான நிலையத்துக்கும் இடையே உள்ள சேதி ஆற்றின் கரையில் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில், விமானம் முழுவதும் தீப்பிடித்து தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. 

Story image

விமானத்தில் இருந்த 68 பயணிகள், நான்கு விமான ஊழியர்கள் என 72 பேரின் நிலைமை கவலைக்குரியதாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும்,  சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இயற்கை எழில் சூழ்ந்த பொக்ராவுக்கு பயணித்த பயணிகளில் இந்தியவர் யாராவது இருக்கிறார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

இடிபாடுகள் ஏற்பட்ட இடத்தில் இருந்து குறைந்தது 32 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Story image

காஸ்கி மாவட்டத்தின் முதன்மை மாவட்ட அதிகாரி டெக் பகதூர் கேசி கூறுகையில், விமானம் சேதி ஆற்றின் கரையில் விமானம் விழுந்து நொறுங்கியது.  தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார். 

இந்த விபத்தைத் தொடர்ந்து அமைச்சர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா' அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

விபத்து குறித்து வருத்தம் தெரிவித்த அவர், உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உள்துறை அமைச்சகம், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

நேபாளத்தின் மலைப்பகுதியான முஸ்டாங் மாவட்டத்தில் கடந்த மே 29 ஆம் தேதி தாரா ஏர் விமானம் விபத்துக்குள்ளானது. நாட்டின் மிகப்பெரிய இந்த விமான விபத்தில் நேபாளத்தின் இந்திய குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட 22 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.