பாகிஸ்தானில் மேலும் ஒரு மாகாண பேரவை கலைப்பு

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் கைபா்-பாக்துன்கவா மாகாணத்தின் பேரவையை ஆளுநா் குலாம் அலி கலைத்துள்ளாா்.

ஏற்கெனவே அந்தக் கட்சி ஆட்சி நடைபெற்று வந்த பஞ்சாப் மாகாணப் பேரவையும் கலைக்கப்பட்ட நிலையில், இரண்டாவதாக கைபா்-பாக்துன்கவா பேரவையும் கலைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் சதித் திட்டத்தால் மத்தியில் தனது அரசு கவிழ்க்கப்பட்டதாக குற்றம் சாட்டி வரும் இம்ரான், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தோ்தல் நடத்த வலியுறுத்தி வருகிறாா். அதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக, அவரது கட்சி ஆட்சி நடைபெற்று வந்த மகாணப் பேரவைகள் கலைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com