விமான விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் நேபாள பிரதமர்!

நேபாளத்தில் எட்டி ஏர்லைன்ஸ் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேபாளப் பிரதமர் புஷ்ப கமல் தஹால் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

நேபாளத்தில் 2 வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட பொகாரா விமானநிலையம் அருகே  72 பயணிகளுடன் சென்ற எட்டி ஏர்லைன்ஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியதில் 69 போ் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்திப்பதற்காக பிரசந்தா திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு வந்த பிரதமர் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். 

மேலும், உடல்களை அடையாளம் காணும் பணியை விரைவுபடுத்தவும், உடல்களை உறவினர்களிடம் விரைவில் ஒப்படைக்கவும் மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கடந்த 30 ஆண்டுகளில் நேபாளத்தில் நடைபெற்ற மோசமான விமான விபத்து இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com