

அமெரிக்காவில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியாகினர்.
அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தின் மாண்டிரி பார்க் பகுதியில் உள்ள நடன ஸ்டுடியோவில் நேற்றிரவு சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் திரண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த சம்பவத்தில் 10 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தூப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க- ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிப்பு
தொடர்ந்து அந்த பகுதியை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.